ரசிகர்களுக்கு நன்றி சொன்ன கார்த்தி!

மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் கலந்துகொண்டவர்களுக்கு கார்த்தி நன்றி!

செய்திகள் 9-Jan-2018 3:14 PM IST VRC கருத்துக்கள்

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டும் முயற்சியாக சென்ற 6-ஆம் தேதி மலேசியாவில் நட்சத்திர கலைவிழா நடந்தது. இவ்விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, சிவகார்த்திகேயன், விஷால், கார்த்தி என தமிழ் சினிமாவின் பெரும்பாலான நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இந்த விழா முடிந்து அனைவரும் தாயகம் திரும்பியுள்ள நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளரும் நடிகருமான கார்த்தி இவ்விழாவை கண்டு களித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக நடிகர் கார்த்தி ட்வீட் செய்திருப்பதில், ‘‘நட்சத்திர கலை விழா நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் வந்து எங்களை கௌரவித்து, உற்சாகப்படுத்தி, இரவு வரை கண்டுகளித்த அன்பு நெஞ்சங்களே, உங்களின் மேலான அன்பில் நெகிழ்ந்து போனோம்! சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்! நன்றி!’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்!

#Karthi #NadigarSangam #NatchathiraVizha2018 #Rajinikanth #KamalHaasan #Vishal #Naaser #Suriya #Sivakarthikeyan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பேட்ட ட்ரைலர்


;