சினிமா டிக்கெட் விலையை குறைத்த ஏ.ஜி.எஸ்.சினிமாஸ்!

சென்னையிலுள்ள ஏ.ஜி.எஸ்.சினிமாஸ் நிறுவனம் சினிமாவுக்கான  கட்டணங்களை  குறைத்துள்ளது!

செய்திகள் 9-Jan-2018 11:35 AM IST VRC கருத்துக்கள்

அதிக வரி விதிப்பு மற்றும் சில கட்டணங்களால் சமீபத்தில் சினிமா டிக்கெட்டுக்கான கட்டணம் மிகவும் உயர்ந்து விட்டது. இதனால் தியேட்டருக்கு படம் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்து விட்டது என்ற கருத்து நிலவி வருகிறது. இந்த நிலைமையை சமாளிக்க சென்னையிலுள்ள ஏ.ஜி.எஸ்.சினிமாஸ் நிறுவனம் புதிய ஒரு முடிவை எடுத்து, சினிமா டிக்கெட்டுக்கான கட்டண குறைப்பை அறிவித்துள்ளது. அதன் மூலம் நேரடி தமிழ் படங்களுக்கான டிக்கெட் கட்டணம் 115 ரூபாய் என்றும், வேறு மொழி படங்களுக்கு 135 ரூபாய் என்றும், வெளிநாட்டு படங்களுக்கு 140 ரூபாய் என்றும் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. இந்த புதிய கட்டணம் நாளை (10-1-18) முதல் நடைமுறைக்கு வருகிறது. ஏ.ஜி.எஸ்.நிறுவனம் எடுத்துள்ள இந்த புதிய கட்டண குறைப்பு சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து சினிமா துறையினருக்கும் மகிழ்ச்சியை தரும் செய்தியாகும்.

#AGSCinemas #TFPC #ThaanaSernthaKoottam #Sketch #TSK #Gulebakavali #AGSEntertainment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கனவே கனவே வீடியோ பாடல் - ஸ்கெட்ச்


;