விக்ரம் பிரபுவின் ‘துப்பாக்கி முனை’யில் ஹன்சிகா!

‘துப்பாக்கி முனை’யில் விக்ரம் பிரபுவுடன் முதன் முதலாக ஜோடி சேரும் ஹன்சிகா!

செய்திகள் 9-Jan-2018 11:10 AM IST VRC கருத்துக்கள்

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் விக்ரம் பிரபு ‘துப்பாக்கி முனை’ என்ற படத்தில் நடிக்கிறார் என்றும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்குகிறார் என்றும் தகலவலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். இப்போது இந்த படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா இணைந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. விக்ரம் பிரபுவுடன் ஹன்சிகா நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக படப்பிடிப்பில் இருந்து வரும் இப்படத்தின் ஒளிப்படிவை ராசாமதி கவனிக்க, எல்.வி.முத்துகணேஷ் இசை அமைக்கிறார். படத்தொகுப்பை சீனிவாசன் கவனிக்கிறார். ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிப்பில் விகரம் பிரபு ஏற்கெனவே ‘அரிமா நம்பி’ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து அந்நிறுவனத்திற்காக விக்ரம் பிரபு நடிக்கும் இரண்டாவது படம் ‘துப்பாக்கி முனை’. இந்த படம் தவிர விக்ரம் பிரபு நடித்து வரும் மற்றொரு படம் ‘பக்கா’. இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#ThuppakkiMunai #VikramPrabhu #Hansika #KalaipuliSthanu #DineshSelvaraj #VCreations

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

100 ட்ரைலர்


;