‘கலகலப்பு-2’ - சுந்தர்.யின் ரிலீஸ் ப்ளான்!

சுந்தர்.சி.இயக்கத்தில் உருவாகி வரும் ‘கலகலப்பு-2’ படம் இம்மாதம் 26-ஆம் வெளியாகும்!

செய்திகள் 9-Jan-2018 11:01 AM IST VRC கருத்துக்கள்

ஜெய், ஜீவா, ‘மிர்ச்சி’ சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரெசா முதலனோர் நடிக்கும் படம் ‘கலகலப்பு-2’. சுந்தர்.சி.இயக்கி, தயாரிக்கும் இந்த படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை முடிக்க மேலும் சில நாட்கள் தேவைப்பட்டதால் படத்தின் ரிலீஸை தள்ளி வைத்தார்கள். இப்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து விட்டதை தொடர்ந்து படம் சென்சாருக்கு தயாராகியுள்ளது. அநேகமாக இந்த படத்தின் சென்சார் இன்று முடிந்து விடும் என்கிறாரகள். சென்சார் முடிந்ததும் இப்படத்தை இம்மாதம் 26-ஆம் தேதி வெளியிட சுந்தர்.சி.முடிவு செய்துள்ளாராம்! ‘ஜெயம்’ ரவியின் ‘டிக் டிக் டிக்’, உதயநிதி ஸ்டாலினின் ‘நிமிர்’ ஆகிய படங்கள் ஜனவரி-26 ரிலீஸ் தேதி குறித்துள்ள நிலையில் அனுஷ்கா முக்கிய கேரக்டரில் நடித்துள்ள தெலுங்கு -தமிழ் படமான ‘பாக்மதி’யும் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

#Kalakalappu2 #MirchiSiva #Jai #Jiiva #SundarC #NikkiGalrani #CatherineTresa #AvniCinemax

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;