விஜய்சேதுபதி படம் குறித்த முக்கிய தகவல்!

திருப்பதி பிரதர்ஸ் 4 படங்களை தயாரிக்கிறது! ‘இடம் பொருள் ஏவல்’ படத்தை மிக விரைவில் வெளியிடவிருக்கிறார்கள்!

செய்திகள் 6-Jan-2018 2:50 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ள நிலையில் இந்நிறுவனம் அடுத்தடுத்து 4 புதிய படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதில் ஒரு படத்தை இயக்கும் பொறுப்பை இயக்குனர் சீனுராமசாமியிடம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரித்து, சீனுராமசாமி இயக்கி விஜய்சேதுபதி, விஷ்ணு விஷால் முதலானோர் நடித்த ‘இடம் பொருள் ஏவல்’ என்ற திரைப்படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்து வருகிறது. இந்த படம் மிக விரவிவில் திரைக்கு வரவிருக்கிறது என்ற தகவலையும், சீனுராமசாமி பகிர்ந்துள்ளார். இதனால் அனைத்து வேலைகளும் முடிவடைந்து நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருந்து வந்த ‘இடம் பொருள் ஏவல்’ திரைக்கு வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதி, விஷ்ணு விஷாலுடன் நந்திதா ஸ்வேதா, காயத்ரி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

#ThirupathiBrothers #SeenuRamasamy #VijaySethupathi #VishnuVishal #NanditaSwetha #AishwaryaRajesh #Yuvan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;