ரவிக்குமார், ஏ.ஆர்.ரஹ்மானுடன் கூட்டணி அமைக்கிறாரா சிவகார்த்திகேயன்?

பொன்ராம் இயக்கி வரும் ‘சீமத்துரை’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தின் தகவல்கள்?

செய்திகள் 6-Jan-2018 12:41 PM IST VRC கருத்துக்கள்

‘வேலைக்காரன்’ படத்தை தொடர்ந்து இப்போது பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்திற்கு ‘சீமத்துரை’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் இந்த படத்தை தயாரிக்கும் ‘24 AM STUDIOS’ நிறுவனம் வெளியிடவில்லை. இந்த படத்தின் முக்கால் வாசி படப்பிடிப்பும் முடிந்து விட்டது என்று கூறப்படுகிற நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் சம்பந்தமான தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன!

பொன்ராம் இயக்கி வரும் படத்தின் வேலைகளை முடித்ததும் சிவகார்த்திகேயன், ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிகுமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறாராம். ‘இன்று நேற்று நாளை’ படத்தை TIME TRAVEL கதை பின்னணியில் இயக்கிய ரவிக்குமார் தனது அடுத்த படத்தை சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதை பின்னணியில் இயக்க உள்ளார் என்றும் இந்த படத்திற்கு இசை அமைக்க, ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றது. ‘ரெமோ’, ‘வேலைக்காரன்’, ‘சீமத்துரை’ படங்களை தொடர்ந்து இந்த படத்தையும் ஆர்.டி.ரஜாவின் ‘24 AM STUDIOS’ நிறுவனமே தயாரிக்கிறதாம்!

#ARRahman #Sivakarthikeyan #Ravikumar #Ponram #IndruNetruNaalai #Velaikkaran #24AMStudios #RDRaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சீமராஜா டீஸர்


;