பாட்டியாக நடிக்க ஆசைப்படும் நிவேதா பெதுராஜ்!

‘ஜெயம்’ ரவி மகன் ஆரவ் ரவியுடன்  அவனது 100-ஆவது படத்தில் பாட்டியாக நடிக்க வேண்டும்! – நிவேதா பெதுராஜ்

செய்திகள் 4-Jan-2018 3:59 PM IST VRC கருத்துக்கள்

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவியுடன் ‘டிக் டிக் டிக்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் நிவேதா பெதுராஜ். இன்று காலை சென்னையில் இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நடைபெற்றது. அப்போது இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நிவேதா பெதுராஜ் பேசும்போது,

‘‘இந்த படத்திற்காக இயக்குனர் சக்தி சரவணன் சார் என்னை ஐந்து நிமிடமே பார்த்தார். உடனே அந்த கேரக்டருக்காக என்னை தேர்ந்தெடுத்தார். அதற்காகவே நான் இந்த படத்தில் சண்டை காட்சிகளில் கூட நிறைய ரிஸ்க் எல்லாம் எடுத்து துணிச்சலாக நடித்துள்ளேன். என் கேரக்டர் நடிக்க கடினமானது என்றாலும் இந்த படக்குழுவினருடன் பணியாற்றியது இனிய அனுபவமாக இருந்தது.

இந்த படத்தில் என்னுடன் ‘ஜெயம்’ ரவி மகன் ஆரவ் குட்டியும் நடித்துள்ளான். அவனை பற்றி சொல்லியே ஆக வேண்டும். அவனுக்கு இது முதல் படம். சிறப்பாக நடித்துள்ளான். அவனும் எதிர்காலத்தில் பெரிய நடிகனாக வருவான். அப்படி அவன் பெரிய நடிகனாகி அவனது 100-ஆவது படத்தில் நானும் நடிக்க வேண்டும், பாட்டியாக!’’ என்றார்!

#TikTikTikAudioLaunch #JayamRavi #NivethaPethuraj #TikTikTik

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அடங்கமறு Trailer


;