‘நிறைய பேர் பயமுறுத்தினார்கள்! ‘டிக் டிக் டிக்’ குறித்து ஜெயம் ரவி

டி.இமான் இசை அமைக்கும் நூறாவது படமான ’டிக் டிக் டீக்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

செய்திகள் 4-Jan-2018 3:46 PM IST VRC கருத்துக்கள்

‘மிருதன்’ படத்தை தொடர்ந்து ‘ஜெயம்’ ரவி, சக்தி சௌந்தர் ராஜன் மீண்டும் இணைந்துள்ள படம் ‘டிக் டிக் டிக்’. நேமிச்சந்த் ஜபக் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். இது, டி.இமான் இசை அமைக்கும் 100-ஆவது படமாகும். ‘டிக் டிக் டிக்’ இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம்’ என்று கூறி வரும் படக் குழுவினர் இந்த படத்தை இம்மாதம் 26-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. அப்போது ‘ஜெயம்’ ரவி பேசும்போது,

‘‘நான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதும் நிறைய பேர், ‘என்ன விண்வெளி சம்பந்தப்பட்ட படத்தில் நடிக்கிறீர்களா? இது சாத்தியமா, ரிஸ்க் இல்லையா?‘ என்றெல்லாம் பயமுறுத்தினார்கள்! ஆனால் இதை நான் ரிஸ்க் என்று நினைக்கவில்லை. விரும்பி ஏற்றுக்கொண்ட படம் இது. நல்ல படம் எடுத்தால் அதற்கு பத்திரிகையாளர்களும், ரசிகர்களும் நிச்சயம் ஆதரவு தருவார்கள் என்பது எனக்கு தெரியும். அந்த வகையில் இந்த படத்தை தரமான ஒரு படமாக எடுத்துள்ளார் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன்.

இந்த படத்தில் கலை இயக்குனராக பணியாற்றிய மூர்த்திக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. மிகப் பெரிய அளவில் இதில் அவரோட ஒர்க் பேசப்படும். இந்த படத்தில் என்னுடன் இணைந்து நடித்துள்ள நிவேதா பெதுராஜிடம் அதீதமான திறமை இருக்கிறது! இந்த படத்தில் அவருக்கு நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் உண்டு! அதில் நடிக்கும்போது அவருக்கு நிறைய அடி எல்லாம் பட்டது. இருந்தாலும் அதையெல்லாம் பொறுத்துகொண்டு சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார்.

இதில் என்னுடன் என்னோட பையன் ஆரவ் ரவியும் நடித்துள்ளான். இது மாதிரி ஒரு சந்தோஷ தருணம் அவ்வளவு எளிதாக யாருக்கும் கிடைக்காது என்று நினைக்கிறேன். என் தம்பி இமான் இசை அமைக்கும் நுறாவது படம் இது! அவர் ஆயிரங்களை தொட வேண்டும். அவர் படத்தின் ரிலீஸ் தேதிக்கு ஒரு மாதம் முன்னதாகவே அனைத்து வேலைகளையும் முடித்து கொடுத்து விட்டார்! இந்த டெடிகேஷன் தான் அவரோட வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.

இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜனை பற்றி சொல்ல வேண்டும் என்றால், இந்த மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் யோசிக்கிறதே கஷ்டம். அப்படியிருக்க இது மாதிரியான ஒரு ஸ்கிரிப்ட்டை ரெடி செய்து அதை சவாலாக எடுத்தும் காட்டியுள்ளார். அவரோட தன்னம்பிக்கைக்கு வெற்றி நிச்சயம்!

இந்த படத்தோட C.G. வேலைகளை சென்னையை சேர்ந்த அஜாக்ஸ் என்ற நிறுவனத்தினர் செய்துள்ளனர். ஹாலிவுட தரத்தில் அவர்களது ஒர்க் அமைந்துள்ளது. ஹாலிவுட் திரையுலகினர் இங்கு வந்து படம் எடுக்கிற அளவுக்கு இந்த படத்துல C.G. ஒர்க் சிறப்பாக அமைந்துள்ளது.

நானும், சக்தி சௌந்தர் ராஜனும் இணைது உருவாக்கிய ‘மிருதன்’ குழந்தைகள் பார்க்க முடியாத படமாக அமைந்து விட்டது. ஆனால் இந்த படம் குழந்தைகளும் விரும்பி பாரக்கக் கூடிய படமாக அமைந்துள்ளது’’ என்றார் ‘ஜெயம்’ ரவி!

இம்மாதம் 26- ஆம் தேதி ரிலீசாகவுள்ள இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவி, நிவேதா பெதுராஜுடன் வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், ஜெயபிரகாஷ், அர்ஜுனன், ரித்திகா முதலானோரும் நடித்துள்ளனர்.

#TikTikTikAudioLaunch #JayamRavi #TikTikTik #NivethaPethuraj #DImman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - குறும்பா ஆடியோ பாடல்


;