மீண்டும் விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும்  படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்!

செய்திகள் 2-Jan-2018 11:46 AM IST VRC கருத்துக்கள்

‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் இந்த படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். ‘மெர்சல்’ படத்திற்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மானே இப்படத்திற்கும் இசை அமைக்கவிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை அமைப்பாளர் என்ற தகவலை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தினர் உறுதிப்படுத்தியுள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறதாம்! ‘உதயா’, ‘அழகிய தமிழ் மகன்’, ‘மெர்சல்’ ஆகிய படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானும் விஜய்யும் இணையும் நான்காவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

#ARRahman #Vijay #ARMurugadoss #Thuppakki #Kaththi #Mersal #Udhaya #Thalapathy62 #Vijay62

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிந்துபாத் ட்ரைலர்


;