சினிமாவில் நாயகியாகும் ‘பிக்பாஸ்’ புகழ் ஜூலி!

‘பிக் பாஸ்’ புகழ் ஜூலி, துரை சுதாகர் நடிக்கும் படம்!

செய்திகள் 2-Jan-2018 10:55 AM IST VRC கருத்துக்கள்

ஒட்டுமொத்த தமிழர்களையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் ஒன்று கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம்! இந்த போராட்டத்தின் முலம் பிரபலமானவர்களில் ஜூலியும் ஒருவர்! இது தவிர சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலமும் ஜூலி மேலும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஜூலிக்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தை ’K7 புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஜூலியுடன் ‘தப்பாட்டம்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ள துரை சுதாகர் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் டைட்டில், இயக்குனர் போன்ற விவரங்களை படக்குழுவினர் வெகு விரவில் அறிவிக்க உள்ளனர்.

#Jallikattu #BraveTamilianWoman #Julie #VijayTV #BigBoss #KamalHassan #DuraiSudhakar #JulieyumNaanguperum

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜூலி 2 வில் எனக்கு 96 தோற்றங்கள் - ராய் லட்சுமி


;