வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் ஒரு நேரடி தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். ‘ஸ்டீவ்ஸ் கார்னர்’ நிறுவம் சார்பில் பொன்ஸ் ஸ்டீஃபன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘வீரமாதேவி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சரித்திர பின்னணி கதையை கொண்டு உருவாகும் இந்த படத்தில் சன்னி லியோன் ‘வீரமாதேவி’ என்ற டைட்டில் ரோலில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை படக்குழுவினர் அடுத்தடுத்து வெளியிடவிருக்கின்றனர். ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய சன்னி லியோன் கதையின் நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவிருக்கிறதாம்.
#SunnyLeone #Vadacurry #Veeramadevi #VCVadivudaiyaan
வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடிக்க இருக்கும் படம் ‘வீரமாதேவி’ என்றும், சரித்திர...
‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய சன்னி லியோன், முதன் முதலாக ஒரு நேரடி தமிழ் படத்தில்...
‘வடகறி’ படத்தில் ஒரேயொரு பாடலுக்கு நடனமாடிய சன்னி லியோன், முதன் முறையாக ஒரு நேரடி தமிழ் படத்தின்...