ரஜினியின் ‘காலா’ புதிய தகவல்!

ரஜினியின் ‘காலா’வின் டப்பிங் வேலைகள்  பூஜையுடன்  துவங்கியது!

செய்திகள் 27-Dec-2017 12:50 PM IST VRC கருத்துக்கள்

‘கபாலி’ படத்தை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித்தும், ரஜினிகாந்தும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் ‘காலா’. தனுஷின் ‘வுண்டபார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் வேலைகள் இன்று சென்னையிலுள்ள KNACK ஸ்டுடியோவில் தொடங்கியது. இதற்கான பூஜையில் படக்குழுவினருடன் இயக்குனர் பா.ரஞ்சித்தும் கலந்துகொண்டார். ரஜினிகாந்த் நேற்று முதல் தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பு முடிந்ததும் ரஜினிகாந்த் ‘காலா’வின் டப்பிங் வேலைகளில் கலந்துகொள்ளவிருக்கிறாராம்.

‘காலா’வில் ரஜினிகாந்துடன் கதாநாயகியாக ஹுமா குரேஷி நடிக்க, அஞ்சலி பட்டேல், நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷு பாண்டே, அரவிந்த் ஆகாஷ், ‘வத்திக்குச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஈஸ்வரி ராவ், அருந்ததி, சாக்‌ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா என நிறைய பேர் நடித்துள்ளனர். ரஜினியின் ‘கபாலி’க்கு இசை அமைத்த சந்தோஷ் நாராயணனே இப்படத்திற்கும் இசை அமைப்பாளர். ஒளிப்பதிவை முரளி கவனித்துள்ளர்.

#Kaala #Rajinikanth #WunderbarFilms #Samuthirakani #PaRanjith #LycaProduction #KaalaDubbing

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;