பிரகாஷ்ராஜ் பெருமைப்படும் ‘டிராஃபிக் ராமசாமி’

‘டிராஃபிக் ராமசாமி’ படத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது! – பிரகாஷ் ராஜ்!

செய்திகள் 23-Dec-2017 12:04 PM IST VRC கருத்துக்கள்

வாழ்ந்துகொண்டிருக்கும் சமூக போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை மற்றும் போராட்டங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’. விஜய் விக்ரம் இயக்கி வரும் இந்த படத்தில் டிராஃபிக் ராமசாமி வேடத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்க, அவருடைய மனைவியாக ரோகிணி நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.கே.சுரேஷ், உபாசனா, இமான் அண்ணாச்சி, அம்பிகா, சார்லஸ் வினோத், மோகன்ராம், தரணி, சேத்தன் முதலானோர் நடிக்க இவர்களுடன் விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், கஸ்தூரி, மனோபாலா, மதன்பாப் ஆகியோர் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக பிரகாஷ் ராஜும் நடிக்கிறார் என்ற தகவலை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் நடிப்பது குறித்து பிரகாஷ் ராஜ் கூறும்போது, ‘‘வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு சமூக போராளியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் நடிப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

‘கிரீன் சிக்னல் கம்பெனி’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை குகன் கவனிக்க, ‘ஹர ஹர மகாதேவகி’ படத்திற்கு இசை அமைத்த பாலமுரளி பாலு இசை அமைக்கிறார்.

#PrakashRaj #TrafficRamasamy #SAChandrasekar #VijayAntony #VijayVikram #Rohini #Mohanram

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திமிருபுடிச்சவன் டீஸர்


;