சென்சார் குழுவினர் பாராட்டுப் பெற்ற ‘சங்குசக்கரம்’

பத்துக்கும் மேற்பட்ட குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ‘சங்குசக்கரம்’

செய்திகள் 22-Dec-2017 1:25 PM IST VRC கருத்துக்கள்

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களை தயாரித்த ‘லியோ விஷன்’ நிறுவனமும் சதீஷின் ‘சினிமாவாலா’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சங்குசக்கரம்’. பி.வாசுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து அனுவபம் பெற்ற மாரிசன் இயக்கியுள்ள இந்த பத்தில் கீதா, திலீப் சுப்பராயன், ஆகியோருடன் மோனிகா, தீபா, ஜெனிஃபர், நிஷேஷ், பாலா, தேஜோ, க்ருத்திக் ஆதித்யா, அஜீஷ், ஆதர்ஷ் என நிறைய குழந்தை நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்! இந்த படம் இம்மாதம் 29-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இதனையொட்டி நடந்த இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படம் குறித்து இயக்குனர் மாரிசன் பேசும்போது,

‘‘குழதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ஹாரர் படம் இது! ஹார் படம் என்றதும் இது வழக்கமான படம் என்று நினைக்க விட வேண்டாம். பேய் பிசாசு போன்ற விஷயங்களை சட்டையர் செய்து எடுக்கப்பட்டுள்ள படம். கடவுள், தூணிலும் துரும்பிலும் இருப்பார் என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட கடவுள் ஏன் பேய் இருக்கும் வீட்டில் இருப்பதில்லை. அப்படி இருந்தால் ‘பேய்’யால் வரும் ஆபத்துக்களை தவிர்க்கலாம் அல்லாவா? இதுபோன்ற விஷயங்களை மையப்படுத்தி குறிப்பாக குழந்தைகளை மகிழ்விக்க வேண்டும் என்று எடுக்கப்பட்டுள்ள படம் இது. உதாரணமாக சொல்வதென்றால் ‘மை டியர் குட்டிச்சாத்தான்‘ படம் மாதிரியான ஒரு படம்!

‘புகை பிடிப்பது புற்று நோயை உண்டாக்கும்! மது அருந்துவது உயிரை கொல்லும்’. இந்த DISCLAIMER கார்டை போட்டு தான் பெரும்பாலான படங்களும் ஆரம்பிக்கும். ஆனால் இப்படத்தில் அந்த கார்டு தேவையில்லை. இந்த படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் முதலில் சொன்ன வார்த்தை இது தான்! இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்று யாரும் இல்லை. கதை தான் ஹீரோ! இந்த படத்தில் நடித்திருக்கும் குழந்தைகள், கீதா, திலீப் சுப்பராயன் என எல்லோரையும் ரொம்பவும் கஷ்டப்படுத்தி நடிக்க வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் நிச்சயமாக விடுமுறை நாட்களை கொண்டாடும் விதமான ஒரு படமாக இருக்கும்’’ என்றார்.

கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்த்ன் ஒளிப்பதிவை ரவிகண்ணன் கவனித்துள்ளார். ஷபீர் இசை அமைத்துள்ளார். படத்தொகுப்பை விஜய் வேலுக்குட்டி கவனித்துள்ளார். சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்துள்ளார்.

#SanguChakkaram #DhilipSubbarayan #LeoVision #Maarison

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கு சக்கரம் - டீஸர்


;