‘உள்குத்து’ பிரச்சனைகளை தீர்த்து வைத்த விஷால்!

‘உள்குத்து’ வாழ்க்கையில் நிறைய விஷயங்களை கற்றுத்தந்துள்ளது! – அட்டகத்த்ல் தினேஷ்

செய்திகள் 22-Dec-2017 12:05 PM IST VRC கருத்துக்கள்

‘அட்டகத்தி’ தினேஷ், நந்திதா, பாலசரவணன், ஸ்ரீமன் முதலானோர் நடித்துள்ள ‘உள்குத்து’ திரைப்படம் வருகிற 29-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அந்த சந்திப்பில் ‘அட்டகத்தி’ தினேஷ் பேசும்போது,

‘‘நீண்ட நாட்களுக்கு பிறகு நான் கதாநாயகனாக நடித்த ‘உள்குத்து’ வெளியாகவிருக்கிறது. இந்த படம் ரெடியாகி சில ரிலீஸ் தேதிகளும் அறிவிக்கப்பட்டு பிறகு ரிலீசாகாமல் இருந்து வந்தது. இந்த இடைவெளியில் வாழ்க்கை எனக்கு நிறைய விஷயங்களை கற்றுத்தந்துள்ளது. எனக்கு நெருக்கமாக இருந்த சிலர் தூரமாக சென்றுள்ளனர். தூரமாக இருந்த சிலர் இன்று எனக்கு நெருக்கமாகி உள்ளனர். இந்த படம் மூலம் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்’’ என்றார்.

‘உள்குத்து’ படத்தை தயாரித்திருக்கும் விட்டல்குமார் பேசும்போது, ‘‘உள்குத்து படம் வெளியாவதற்கு முக்கிய காரணம் கடவுளும், விஷால் சாரும் தான். இந்த படம் வெளியாகுமா என்ற நிலை இருந்தபோது விஷால் சார் தான் அந்த பிரச்சனைகளை முடித்து வைத்து படம் வெளியாக உதவி செய்தார். ‘திருடன் போலீஸ்’ படத்தை இயக்கிய கார்த்திக் ராஜு இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் தற்போதைய நாட்டின் நிலைமையை எடுத்து கூறும் படமாக இருக்கும். கந்துவட்டி பிரச்சனைகளால் மீனவர்களும், அவர்களுக்கு வட்டிக்கு பணம் வாங்கி கொடுப்பவர்களும் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற மைய கருத்தை வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இசை கலைஞனாக இருக்கும் எனக்கு சினிமா மீதுள்ள ஆசையில் நான் தயாரித்துள்ள முதல் படம் இது. எந்த ஒரு நல்ல விஷயத்தையும் தீய சக்தியால் கட்டுப்படுத்த முடியாது. சில சூழ்நிலையால இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. கடவுளின் அருளாலும் விஷால் செய்த உதவியாலும் இந்த படம் வருகிற 29-ஆம் தேதி வெளியாகும்’’ என்றார்.

இந்த படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், நந்திதா, பாலசரவணன், ஸ்ரீமன் ஆகியோருடன் வில்லன்களாக ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், சரத் லோகித்ஷா நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

#Ulkuthu #AttakathiDinesh #Nandita #CaarthickRaju #Vishal #BalaSaravanan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டான டீஸர்


;