‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய சன்னி லியோன், முதன் முதலாக ஒரு நேரடி தமிழ் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் இந்த படத்தை வி.சி.வடிவுடையான் இயக்குகிறார் என்றும் தகவலை ஒரு சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். ‘ஸ்டீவ்ஸ் கார்னர்’ நிறுவனம் சார்பில் பொன்ஸ் ஸ்டீஃபன் தயாரிக்கும் பெயரிடப்படாத இந்த படத்திற்கான மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை அடுத்தடுத்து அறிவிக்க இருக்கிறது என்று இப்படக் குழுவினர் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் இந்த படத்திற்கு அம்ரிஷ் கணேஷ் இசை அமைக்கவிருப்பதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளார்கள். ”மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்திற்கு இசை அமைத்த அம்ரிஷ் கணேஷ் தான் விரைவில் வெளியாகவிருக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘யங் மங் சங்’, ‘பொட்டு’, ‘கர்ஜனை’, ‘சார்லி சாப்ளின்-2’ ஆகிய படங்களுக்கும் இசை அமைப்பாளர். இந்த படங்களை தொடர்ந்து அம்ரிஷ கணேஷ் இசை அமைக்கும் இந்த படத்தில் சன்னி லியோன் சரித்திர கதை பின்னணியிலான ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் அதற்காக அவர் பல பயிற்சிகள் எடுத்து வருகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
#SunnyLeone #Vadacurry #VCVadivudaiyaan #AmrishGanesh #MottaSivaKettaSiva
வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடிக்க இருக்கும் படம் ‘வீரமாதேவி’ என்றும், சரித்திர...
வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் ஒரு நேரடி தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் இந்த...
‘வடகறி’ படத்தில் ஒரேயொரு பாடலுக்கு நடனமாடிய சன்னி லியோன், முதன் முறையாக ஒரு நேரடி தமிழ் படத்தின்...