‘அருவி’ ரொம்ப வருஷம் பேசப்படும்! - ரஜினி புகழாரம்

‘அருவி’ படத்தை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

செய்திகள் 20-Dec-2017 10:26 AM IST Chandru கருத்துக்கள்

‘அருவி’ திரைப்படம் கடந்த வெள்ளிகிழமை வெளியாகி உலகமெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் நாள் மிகக்குறைந்த தியேட்டர்கள் எண்ணிகையில் ரீலீஸ் செய்யப்பட்ட அருவி, மக்களிடம் கிடைத்த மகத்தான வரவேற்பு காரணமாக இப்போது அதிகப்படியான திரையரங்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு நடந்துகொண்டிருக்கும் இந்த சமயத்தில் கூட மாலை நேரத்தில் அனைவரும் குடும்பத்தோடு வந்து ‘அருவி’ திரைப்படத்தை கண்டு ரசித்து செல்கிறார்கள்.

இந்நிலையில், ‘அருவி’ திரைப்படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் அருண்பிரபுவை தொலைபேசியில் அழைத்து, ‘‘அருவி என்னை அழவைத்த படம், சிரிக்க படம், சிந்திக்க வைத்த படம். உங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. ரொம்ப வருஷம் இந்த படம் பேசப்படும்!’’ என்று படத்தைப் பற்றி பாராட்டி இயக்குநர் அருண் பிரபுவிடம் 20 நிமிடம் பேசியுள்ளார்.

#Rajinikanth #Aruvi #Thalaivar #ArunPrabhuPurushothaman #Superstar #SRPrabhu #DreamWarriorPictures #AditiBalan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;