‘சக்கப்போடு போடு ராஜா’ படத்தை பார்க்கத் தூண்டும் 5 முக்கிய விஷயங்கள்

‘சக்கப்போடு போடு ராஜா’ படத்தை பார்க்கத் தூண்டும் 5 முக்கிய விஷயங்கள்

முன்னோட்டம் 19-Dec-2017 4:23 PM IST Top 10 கருத்துக்கள்

அடுத்தடுத்து வித்தியாசமான ஸ்கிரிப்ட்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சந்தானம் கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோவாக தன்னை நிலைநிறுத்தி வருகிறார். தில்லுக்கு துட்டு வெற்றியைத் தொடர்ந்து சந்தானம் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் படம் ‘சக்கப்போடு போடு ராஜா’. இப்படம் ஒரு நல்ல பொழுதுபோக்குப்படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதற்கான 5 முக்கிய விஷயங்களை இங்கே தொகுத்துள்ளோம்.

1. எந்த ஹீரோ படமாக இருந்தாலும் அதில் காமெடியனாக சந்தானம் இருக்கிறாரென்றாலே, அவரைப் பார்ப்பதற்கு ஒரு பெரிய கூட்டம் தியேட்டருக்கு வரும். இப்போது அவரே நாயகனாக நடித்து வருவதால் சொல்லவா வேண்டும். சக்கப்போடு போடு ராஜா படத்தை ரசிகர்கள் பார்க்க வேண்டுமென நினைப்பதற்கு முதல் காரணமாக சந்தானத்தைத் தவிர வேறென்ன சொல்வது. இப்படத்தில் காமெடியையும் தாண்டி ரொமான்ஸ், ஆக்ஷன் ஏரியாக்களிலும் ஸ்பெஷல் ஸ்கோர் செய்திருக்கிறாராம் சந்தானம்.

2. பன்கலை வித்தகர் டி.ஆரின் மகன் எஸ்.டி.ஆர். ‘சக்கப்போடு போடு ராஜா’ மூலம் இசையமைப்பாளர் அவதாரமும் எடுத்திருக்கிறார். எஸ்.டி.ஆரின் பாடல்கள் படத்தின் மீதான கவனத்தை அதிகரித்திருக்கிறது. அதோடு படத்தின் பின்னணி இசைக்காக சில புதிய முயற்சிகளைச் செய்திருக்கிறாராம் சிம்பு. அது நிச்சயமாக ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸாக இருக்கும் என நடிகர் சாந்தனு ட்வீட் செய்திருக்கிறார்.

3. சந்தானத்துடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்திருக்கிறார் நாயகி வைபவி ஷாண்டில்யா. சந்தானத்துடன் அவர் நடித்த முதல் படமான சர்வர் சுந்தரம் படம் இன்னும் வெளிவராத நிலையில், அவரின் இரண்டாவது படமான சக்கப்போடு போடு ராஜா அறிமுகப் படமாக ரிலீஸாகவிருக்கிறது. அவரின் கிளாமர் லுக்கும், பெர்ஃபாமென்ஸும் படத்திற்கு ப்ளஸ்ஸாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4. கிடைக்கும் இடங்களிலெல்லாம் சந்தானம் தன்னுடைய காமெடி கவுன்ட்டர்களை தொடுத்துக்கொண்டிருப்பார் என்பது ஒருபுறமென்றால், இப்படத்தின் மெயின் காமெடியனாக விவேக் வேறு இருக்கிறார் என்பது பொழுதுபோக்கிற்கு பெரிய கியாரண்டியாக அமைந்துள்ளது. கூடவே விடிவி கணேஷ், ரோபோ ஷங்கரின் டைமிங் காமெடிகளும் கூடுதல் சிரிப்பை வரவழைக்கும் என்கிறார்கள்.

5. கோபிசந்த் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘லௌக்யம்’ படத்தைத்தான் தமிழில் ரீமேக் செய்திருக்கிறாராம் இயக்குனர் சேதுராமன். இருந்தாலும், தமிழுக்கேற்றபடியும், சந்தானத்தின் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் வகையிலும் திரைக்கதையில் நிறைய மாற்றம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.#SakkaPoduPoduRaja #SPPR #Santhanam #STR #STRMusical #VaibhaviShandilya #VTVGanesh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;