‘அனிருத்’துக்காக 7 அறிமுக பாடலாசிரியர்கள் எழுதிய பாடல்கள்!

மகேஷ் பாபு, காஜல் அகர்வால், சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும்  ‘அனிருத்’ படத்தின் மூலம் 7 புதிய பாடலாசிரியர்கள் அறிமுகமாகிறார்கள்!

செய்திகள் 19-Dec-2017 12:42 PM IST VRC கருத்துக்கள்

மகேஷ் பாபு, காஜல் அகர்வால், சமந்தா, சத்யராஜ், ரேவதி முதலானோர் நடித்து தெலுங்கில் வெளியான படம் ‘பிரம்மோற்சவம்’. இந்த படம் தமிழில் ‘அனிருத்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ‘சித்தாரா என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் வழங்க, சுவாதி வர்ஷினியின் ‘பத்ரகாளி ஃபிலிம்ஸ்’ பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத் மற்றும் சத்யசீத்தால், வெங்கட்ராவ் ஆகியோர் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். காந்த் இயக்கியுள்ள இந்த படத்திற்கு மிக்கி ஜே.மேயர் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. அப்போது இந்த படத்திற்கு வசனம் எழுதியிருக்கும் ஏ.ஆர்.கே.ராஜராஜா பேசும்போது,

‘‘தனது உறவுகள் பசித்திருக்க, அடுத்தவர்களுக்கு தானம் செய்வதை விட மோசமான காரியம் வேறேதும் இல்லை’ என்ற நபிகள் நாயகத்தின் பொன் மொழிதான் இந்த படத்தின் கதைக்கரு. முதன் முதலாக இந்த படத்தில் யுவகிருஷ்ணா, மகேந்திரன் குலராஜா, டாக்டர் கர்ணா, திருமலை சோமு, எழில்வேந்தன், அம்பிகா குமரன், பாசிகாபுரம் வெங்கடேஷ் ஆகிய 7 பேரை பாடலாசிரியர்களாக அறிமுகப்படுத்துகிறோம். பாடல்கள் மற்றும் இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, குடுமப் உறவுகளை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் இப்படம் அனைத்து ரக ரசிகர்களுக்கும் பிடிக்கும் விதமாக இருக்கும்’’ என்றார்.

விரைவில் வெளியாகவிருக்கும் இந்த படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். மகேஷ் பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஸ்பைடர்’ படத்தை தொடர்ந்து இப்படம் வெளியாகவிருக்கிறது.

#Anirudh #MaheshBabu #Samantha #KajalAgarwal #Bramotshavam #Sathyaraj #Revathy

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;