அதர்வா, நயன்தாராவின் ’இமைக்கா நொடிகள்’ புதிய தகவல்கள்!

அஜய்ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிந்து விட்டது!

செய்திகள் 18-Dec-2017 12:38 PM IST VRC கருத்துக்கள்

அஜய்ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யாப், ராஷிகண்ணா, விஜய்சேதுபதி, ரமேஷ் திலக் ஆகியோர் நடிக்கும் படம் ‘இமைக்கா நொடிகள்’. ‘கேமியோ ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் சி.ஜெ ஜெயக்குமார் தயாரித்து வரும் இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிந்துவிட்டது என்பதை நேற்று அதர்வா இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்துகொண்டவர்களுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார். இந்த படத்தை அடுத்த மாதம் (ஜனவரி) வெளியிட திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் இப்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் பிசியாகியுள்ளனர். இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைக்கிறார். படத்தொகுப்பை புவன் சீனிவாசன் கவனித்து வருகிறார்.

#ImaikkaNodigal #Atharvaa #Nayanthara #VijaySethupathi #AnuragKashyap #CameoFilms #CJJayakumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விளம்பர இடைவெளி வீடியோ பாடல் - இமைக்க நொடிகள்


;