உதயநிதியுடன் இணையும் விஜயசேதுபதி பட நாயகி?

‘இரும்புத்திரை’ படத்தை இயக்கி வரும் மித்ரன், அடுத்து உதயநிதி நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார்!

செய்திகள் 18-Dec-2017 11:48 AM IST VRC கருத்துக்கள்

விஷால் நடிப்பில் ‘இரும்புத்திரை’ என்ற படத்தை இயக்கி வரும் மித்ரன் இந்த படம் முடிந்ததும் உதயநிதி நடிப்பில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தின் கதாநாயகியாக ‘இவன் தந்திரன்’, ‘விக்ரம் வேதா’, ‘ரிச்சி’ முதலான படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை நடிக்க வைக்க மித்ரன் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்! மித்ரன் சொன்ன ஒன் லைன் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு பிடித்துவிட்டது என்றும் மேலும் கதை மற்றும் படம் குறித்த பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகிறது என்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை நாம் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் உறுதிப்படுத்தினார்.

ப்ரியதர்சன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘நிமிர்’ படத்தின் இறுதிகட்ட வேலகள் இப்போது நடந்துவருகிறது. இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சீனு ராமசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (ஜனவரி) 19-ஆம் தேதி துவங்கவிருக்கிறது என்ற தகவலும் வெளியாகி அந்த தகவலை செய்தியாக வெளியிட்டிருந்தோம். இதனால் சீனுராமசாமி இயக்கும் படமே முதலில் துவங்க வாய்ப்பிருக்கிறது.

#ShraddhaSrinath #Udhayanidhi #Vishal #Mithran #Irumbuthirai #VikramVedha #IvanThanthiran #Richie

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்


;