ஜெய், பிரபுதேவா படங்களுடன் களமிறங்கும் ‘அட்டகத்தி’ தினேஷ் படம்!

‘அட்டகத்தி’ தினேஷ், நந்திதா நடித்துள்ள ‘உள்குத்து’ 29-ஆம் தேதி ரிலீசாகிறது

செய்திகள் 18-Dec-2017 10:52 AM IST VRC கருத்துக்கள்

‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ஜெ.செல்வகுமார் தயாரித்துள்ள படம் ‘உள்குத்து’. கார்த்திக் ராஜு இயக்கியுள்ள இந்த படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், நந்திதா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, பாலசரவணன், ஜான் விஜய், சாயா சிங், ஸ்ரீமன், ‘பாண்டியநாடு’ சரத் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் இப்படம் ஏற்கெனவே ரிலீஸ் தேதிகள் குறிக்கப்பட்டு, அதன் பிறகு ரிலீசாகாமல் இருந்து வந்தது. இப்போது ‘உள்குத்து’ படத்திற்கு மீண்டும் ரிலிஸ் தேதி குறித்துள்ளனர். வருகிற 29-ஆம் தேதி ‘உள்குத்து’ படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த வருடத்தின் கடைசி வெள்ளிக்கிழமை 29-ஆம் தேதி வருகிறது. இந்த தேதியில் ஜெய், அஞ்சலி நடித்துள்ள ‘பலூன்’, தங்கர் பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா, பூமிகா இணைந்து நடித்துள்ள ‘களவாடிய பொழுதுகள்’ ஆகிய படங்கள் வெளியாகவிருக்கும் நிலையில் அந்த படங்களுடன் ‘அட்டகத்தி’ தினேஷின் ‘உள்குத்து’ம் வெளியாகவிருக்கிறது,.

#Ulkuthu #AttakathiDinesh #CaarthickRaju #Balloon #PrabhuDeva #KalavadiyaPozhuthukal #Nandita

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கண்ணாடி ட்ரைலர்


;