40 ஆங்கில படங்களை பார்த்து உருவாக்கிய கதை ‘பலூன்’ – இயக்குனர் சினீஷ்

ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடித்த ‘பலூன்’ திரைப்பட கதை உருவானது எப்படி?

செய்திகள் 18-Dec-2017 10:15 AM IST VRC கருத்துக்கள்

ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் முதலானோர் நடித்து, சினீஷ் இயக்கியுள்ள படம் ‘பலூன்’. ‘70 எம்.எம்.என்டர்டெயிமென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ‘ஆரா சினிமாஸ்’ வெளியிடுகிறது. வருகிற 29-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்தின் பத்திரைகையாளர் சந்திப்பில் இயக்குனர் சினீஷ் பேசும்போது,

‘வேட்டை மன்னன்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பிறகு சில குறும்படங்களை இயக்கினேன். அதன் பிறகு படங்களை இயக்குவதற்கான முயற்சிகளில் இறங்கிய நேரம்! ‘வில் அம்பு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ஈஞானவேல் ராஜாவை சந்தித்தேன். அவர் என்னிடம், ‘சினீஷ் ஹாரர் கதைகள் ஏதாவது வச்சிருக்கீங்களா, ஒரு ஹாரர் படத்தை பண்ணலாம்’ என்றார். அப்போது என்னிடம் அதுமாதிரி கதை ஒன்றும் இல்லை. ஒரு தயாரிப்பாளரே ஹாரர் படம் பண்ணாலாம் என்று சொல்கிறாரே என்று வீட்டுக்கு போய் யோசித்தபோது, ஒரு ஹாரர் கதையை ரெடி பண்ணுவோம் என்று முடிவு செய்தேன். அதற்காக முப்பது, நாற்பது ஹாலிவுட் திரைப்படங்களோட சி.டி.க்களை வாங்கி பார்த்தேன்! அந்த சி.டி.க்களை பார்த்து 20 நாட்களில் ஒரு ஹாரர் கதையை உருவாக்கினேன். அதன் பிறகு ஞானவேல் ராஜாவை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. அப்போது தான் நண்பர்கள் மூலம் இந்த படத்தோட தயாரிப்பாளர்களை சந்தித்து கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் நான் சொன்ன கதையை படமாக்க முன் வந்தார்கள். அப்பாடா, தயாரிப்பாளர்கள் மாட்டிகிட்டாங்க என்று மனதில் நினைத்து பட வேலைகளை துவங்கினேன். அப்படி உருவான படம் தான் இந்த ‘பலூன்’.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் நாம் ஏதாவது ஒரு படத்தோட ரெஃப்ரென்ஸ் எடுத்து படம் பண்ணினால் கூட அதை ரசிகர்கள் எளிதில் கண்டு பிடித்து விடுகிறார்கள். இப்போது இருக்கிற் ரசிகர்கள் மிகவும் பிரில்லியன்டானவர்களாக இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது நாம் உண்மையை சொல்வதே சரியாக இருக்கும். ‘மௌனராகம்’ படம் மாதிரி ஒரு படத்தை எடுத்து, நான் ‘மௌனராகம்’ படத்தை பார்த்ததே இல்லை’ என்று சொல்லி மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. அப்படிப்பட்ட ஆள் நான் இல்லை. நான் இந்த படத்தை எந்தெந்த படங்களிலிருந்து காப்பி அடித்திருக்கிறேனோ, அந்த படங்களோட விவரங்களை தாங்க்ஸ் கார்டா இப்படத்தில் போட்டிருக்கிறேன். நாம் சாமர்த்தியமாக பொய் சொன்னாலும் ரசிகர்கள் அதை எளிதில் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதால் தான் இதை சொல்கிறேன்’’ என்றார் சினீஷ்.

சினீஷ் பேசுவதற்கு முன்னதாக படத்தின் தயாரிப்பாளர் அருண்பாலாஜி, நடிகைகள் அஞ்சலி, ஜனனி ஐயர், படத்தொகுப்பாளர் ரூபன் மற்றும் பலர் பேசினார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்,. ஆர்,.சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

#Balloon #Jai #Anjali #JananiIyer #Sinish #YuvanShankarRaja #YogiBabu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;