ஜனவரி 5,6 தேதிகளில் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து!

மலேசியாவில் நடைபெறவிருக்கும் நட்சத்திர கலைவிழாவுக்காக ஜனவரி 5, 6 தேதிகளில் படப்பிடிப்பு வேலைகள் நிறுத்தம்!

செய்திகள் 16-Dec-2017 4:17 PM IST VRC கருத்துக்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் பொருட்டு, மலேசியாவில் பிரம்மாண்டமான நட்சத்திர கலைவிழாவை நடத்த நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது. இந்த நட்சத்திர கலைவிழா ஜனவரி மாதம் 5ஆம் தேதியும், 6-ஆம் தேதியும் மலேசியாவில் உள்ள புக்கட் ஜலீல் இண்டோர் ஸ்டேடியத்தில் நடக்கவிருக்கிறது. இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் உட்பட எல்லா நடிகர், நடிகைகளும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நட்சத்திர கலைவிழாவில் நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கிறது.

இந்த நட்சத்திர கலைவிழாவில் அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்துகொள்ள வசதியாக ஜனவரி 5,6 தேதிகளில் அனைத்து படப்பிடிப்பு வேலைகளுக்கும் விடுமுறை விடுமாறு தென்னிந்திய நடிகர் சங்கம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஜனவரி 5,6 ஆகிய இரண்டு நாட்கள் படப்பிடிப்புகள் ரத்து செய்து விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்த தகவலை நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Rajinikanth #KamalHaasan #Vijay #Vishal #NadigarSangam #SivaKarthikeyan #Ponvannan #Naaser #Karunas

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;