ரிலீஸ் தேதி குறித்த விஜய் படம்!

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடிக்கும் ‘கரு’ ஃபிப்ரவரி 19-ஆம் தேதி ரிலீசாகிறது!

செய்திகள் 15-Dec-2017 5:35 PM IST VRC கருத்துக்கள்

ஏ.எல்.விஜய் இயக்கி வரும் படம் ‘கரு’. லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் கதையின் நாயகியாக ‘பிரேமம்’ படப் புகழ் சாய் பல்லவி நடிக்கிறார். கரு கலைப்பு சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதையைக் கொண்ட இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து தற்போது இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை குறித்துள்ளார் படக்குழுவினர். ‘கரு’ படத்தை வரும் ஃபிப்ரவரி 9-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். சாய் பல்லவியுடன் நாக சௌர்யா, வெரோனிகா அரோரா ஆகியோரும் நடிக்கும் இந்த படத்திற்கு சாம்.சி இசை அமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘கரு’ திரைப்படம் ‘கனம்’ என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகவிருக்கிறது.

#Karu #SaiPallavi #ALVijay #LycaProduction #Premam #SamCS #NiravShah #Kanam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;