வில்லனாக நடிக்க ஆசைப்பட்ட விஷால்!

‘இரும்புத்திரை’யில் வில்லனாக நடிக்க ஆசைப்பட்ட விஷால்!

செய்திகள் 15-Dec-2017 11:59 AM IST VRC கருத்துக்கள்

‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பாக விஷால் தயாரித்து நடிக்கும் படம் ‘இரும்புத்திரை’. மித்ரன் இயக்கும் இந்த படத்தில் விஷாலுடன் கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார். இவர்களுடன் வில்லனாக அர்ஜுன் நடிக்கிறார். இந்த படம் குறித்து இயக்குனர் மித்ரன் கூறும்போது,

‘‘இரும்புத்திரை’ படத்தின் கதையை முதலில் நான் விஷாலிடம் கூறும்போது அவர் இந்த கதை பிடித்திருந்தால் வேறு ஒருவரை கதாநாயகனாக நடிக்க வைத்து தயாரிக்கலாம் என்ற முடிவில் தான் கதையை கேட்டார். நான் கதையை சொல்லி முடித்ததும், ‘இதில் நானே நடிக்கிறேன், அதுவும் அந்த வில்லன் பாத்திரத்தில்’ என்றார்! அவர் அப்படி கூற காரணம் அந்த வில்லன் கதாபாத்திரம் அவ்வளவு பவர்ஃபுல்லானது. அதன் பிறகு, ‘நீங்கள் தான் இதில் ஹீரோவாக நடிக்க வேண்டும்’ என்று கூறி கதையில் அவரது கேரக்டரில் நிறைய மாற்றங்கள் செய்தேன். முதலில் வழக்கமான ஒரு ஹீரோவாக இருந்த அவரது கதாபாத்திரத்தை மிலிட்டரி மேன் கதாபாத்திரமகாக உருவாக்கினேன். இந்த கதாபாத்திரம் நாம் அறியாத பல விஷயங்களை பேசும். அதைப்போலதான் சமந்தா ஏற்று நடிக்கும் கதாபாத்திரமும்! ‘இரும்புத்திரை’யில் விஷால், சமந்தா, அர்ஜுன் கதாபாத்திரங்கள் மாறுபட்டதாக இருக்கும்’’ என்றார்.

‘இரும்புத்திரை’யின் ஒளிப்பதிவை ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் கவனிக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ஆன்டனி எல்.ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். இறுதிகட்ட வேலைகளில் இருந்து வரும் இரும்புத்திரை அடுத்த மாதம் வெளியாகும்.

#IrumbuThirai #Vishal #Samantha #Arjun #Mithran #VishalFilmFactory

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிலுக்குவார்பட்டி சிங்கம் டைலர்


;