‘தர்மத்தின் தலைவன்’ ரஜினிக்கு மரியாதை செய்த ஆர்யா!

தர்மத்தின் தலைவன் படத்தை ஞாபகப்படுத்தும் ஆர்யாவின் கஜினிகாந்த்!

செய்திகள் 12-Dec-2017 11:20 AM IST VRC கருத்துக்கள்

‘ஹர ஹர மகாதேவகி’ படத்தை தொடர்ந்து ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தை இயக்கி வரும் சந்தோஷ் பி.ஜெயக்குமார் அடுத்து ‘கஜினிகாந்த்’ என்ற படத்தையும் இயக்குகிறார். ஆர்யா நடிக்கும் இந்த படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்று படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. இந்த படத்தில் ஆர்யாவுடன் கதாநாயகியாக சாயிஷா நடிக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். நேற்று (11-12-17) ஆர்யாவின் பிறந்த நாள். அதைப் போல இன்று (12-12-17) ரஜினிகாந்தின் பிறந்த நாள்! ஆர்யா, ரஜினி பிறந்த நாட்களை முன்னிட்டு ‘கஜினிகாந்த்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று இரவு 11.59 மணிக்கு வெளியிட்டனர். ரஜினி நடிப்பில் வெளியான ‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் ரஜினிகாந்த் தோன்றுவது மாதிரியான ஒரு கெட்-அப்பில் ஆர்யா இருப்பது மாதிரி ‘கஜினிகாந்த்’ ஃபர்ஸ்ட் லுக்கை வடிவமைத்திருக்கிறார்கள் படக்குழுவினர். வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களின் கவனத்துக்கு வரும் என்பது நிச்சயம்.

#Ghajinikanth #Arya #DharmathinThalaivan #StudioGreen #SanthoshPJayakumar #HaraHaraMahadevaki #BalamuraliBalu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தில்லுக்கு துட்டு 2 டீஸர் 02


;