நாளை, வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’

வெங்கட் பிரபு இயக்கும் ‘பார்ட்டி’ படத்தின் டீஸர் நாளை வெளியாகிறது!

செய்திகள் 12-Dec-2017 11:07 AM IST VRC கருத்துக்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மிர்ச்சி’ சிவா, ‘கயல்’ சந்திரன், ஷாம், சத்யராஜ, ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கெசன்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெதுராஜ், நாசர், சம்பத், சுரேஷ் என பெரிய நட்சத்திரப் பாட்டாளம் நடிக்கும் படம் ‘பார்ட்டி’. ‘அம்மா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் ஃபிஜி தீவில் நடைபெற்றுள்ளது. திட்டமிட்டபடி 55 நாட்களில் அனைத்து படப்பிடிப்புகளையும் முடித்துக்கொண்ட படக்குழுவினர் இப்போது படத்தின் இறுதிகட்ட வேலைகளில் பிசியாகியுள்ளனர். ‘பார்ட்டி’யை ஜனவரி மாதம் களமிறக்க திட்டமிடப்பட்டு பணியாற்றி வரும் படக்குழுவினர் இப்படத்தின் டீஸரை நாளை வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த படத்தில் இசைக்கு பிரேம்ஜி அமரன், ஒளிப்பதிவுக்கு ராஜேஷ் யாதவ், படத்தொகுப்புக்கு கே.எல்;பிரவீன் என கூட்டணி அமைத்துள்ளார் வெங்கட் பிரபு!

#VenkatPrabhu #Party #Jai #Shaam #MirchiShiva #KayalChandran #Sathyaraj #Jayaram #RamyaKrishnan #ReginaCassandra

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீயா 2 - ட்ரைலர்


;