சினிமா மக்கள் தொடர்பாளர் யூனியன் நடத்தும் முப்பெரும் விழா!

சினிமா மக்கள் தொடர்பாளர் யூனியன் நடத்தும் முப்பெரும் விழா!

செய்திகள் 11-Dec-2017 11:48 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் 1958-ஆம் ஆண்டு ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தின் மூலம் மறைந்த ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் மக்கள் தொடர்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டார். அதன் பின் கலைஞர் கருணாநிதி முதல்வரான பிறகு ஃபிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கி கௌரவித்தார். அதன் பிறகு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் திரையுலக சேகரிப்பான தகவல் மற்றும் புகைப்படங்களை பாதுகாத்து வைப்பதற்காக நிதி அளித்தார்.

சினிமாவில் மக்கள் தொடர்பாளர் என்ற தொழில் துவங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டியும், தென்னிந்திய மக்கள் தொடர்பாளர் யூனியன் துவங்கி 25 ஆண்டுகள் ஆனதையொட்டியும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடி வரும் நிலையிலும் மக்கள் தொடர்பாளர் யூனியன் சார்பில் முப்பெரும் விழாவை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான விழா ஜனவரி மாதம் 3-ஆம் தேதி சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறவிருக்கிறது.

இவ்விழாவில் எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்க உள்ளனர். அத்துடன் மக்கள் தொடர்பாளர் யூனியன் சார்பாக மலர் ஒன்றையும் வெளியிடவுள்ளனர். இவ்விழாவில் இசை அமைப்பாளர் (சங்கர்) கணேஷின் திரைப்பட இன்னிசையும், கலா மாஸ்டர் குழுவினரின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெறவிருக்கிறது. இந்த தகவல்களை நேற்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மக்கள் தொடர்பாளர் யூனியன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

#PROUnion #MGR #FilmnewsAnandhan #Jayalalitha

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வாலு - தாறுமாறு பாடல் வீடியோ


;