ரஜினிகாந்த் பிறந்தநாளில் ‘கஜினிகாந்த்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியிடும் சூர்யா!

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் ஆர்யா நடிக்கும் ‘கஜினிகாந்த்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அறிவிப்பு

செய்திகள் 11-Dec-2017 11:17 AM IST Chandru கருத்துக்கள்

‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தைத் தொடர்ந்து ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தை சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்குகிறார் என்ற தகவல் கடந்த வாரம் வெளியானது. ஆர்யா, சாயிஷா சாய்கல் நடிக்கும் இப்படத்திற்கு ‘கஜினிகாந்த்’ என்ற வித்தியாசமான தலைப்பை வைத்திருக்கிறார்கள். இசைக்கு பாலமுரளி பாலு, ஒளிப்பதிவுக்கு பல்லு, எடிட்டிங்கிற்கு ஜி.கே.பிரசன்னா கூட்டணி அமைத்துள்ளனர்.

இன்று நடிகர் ஆர்யாவின் பிறந்தநாள் என்பதோடு, நாளை சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளாகவும் இருப்பதால் இன்று இரவு 11.59க்கு ‘கஜினிகாந்த்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்கிறார் நடிகர் சூர்யா.

#Ghajinikanth #Arya #Suriya #Rajinikanth #Superstar #SanthoshPJayakumar #HaraHaraMahadevaki

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தில்லுக்கு துட்டு 2 டீஸர் 02


;