சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘மாநகரம்’

அரவிந்த் சாமி துவக்கி வைக்கும் சென்னை 15-ஆவது சர்வதேச திரைப்பட விழா!

செய்திகள் 11-Dec-2017 10:51 AM IST VRC கருத்துக்கள்

சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் நடத்தும் 15-ஆவது சர்வதேச சென்னை திரைப்பட விழா வருகிற 14ஆம் தேதி துவங்கி 21-ஆம் தேதி வரை சென்னயில் நடைபெறவுள்ளது. சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கத்தில் வருகிற 14-ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு துவங்கவுள்ள இவ்விழாவில் நடிகர் அரவிந்த்சாமி தலைமை விருந்தினராக கலந்துகொள்கிறார். சென்னையிலுள்ள தேவி, தேவிபாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் ஃபிலிம் செண்டர், ரஷ்யன் சென்டர் ஆஃப் சயின்ஸ் & கல்சுரல் ஆகிய திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றது. இந்த திரைப்பட விழாவில் ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்த ‘மாநகரம்’ உட்பட 12 தமிழ் திரைப்படங்கள் திரையிட தேர்வாகியுள்ளது. அந்த 12 படங்கள் விவரம் வருமாறு:

மாநகரம், 8 தோட்டாக்கள், அறம், கடுகு, குரங்கு பொம்மை, மகளிர் மட்டும், மனுசங்கடா, ஒரு கிடாயின் கருணை மனு, ஒரு குப்பை கதை, தரமணி, துப்பறிவாளன், விக்ரம் வேதா ஆகிய படங்கள் திரையிடப்படுகிறது.

#Maanagaram #CIFF #PotentialStudios #LokeshGanagaraj #ArvindSwamy #Aramm #Kadugu #KuranguBommai #MagalirMattum

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூப்பர் ஸ்டாரின் வாழ்த்துக்கள் - அருண் பிரபு பேட்டி


;