ரஜினியின் ‘காலா’ அப்டேட்ஸ்!

ரஜினியின் ‘காலா’ அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து டப்பிங் பணிகள் துவங்கி விட்டது!

செய்திகள் 9-Dec-2017 5:28 PM IST VRC கருத்துக்கள்

ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க, பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘காலா’ பட வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளையும் சமீபத்தில் முடித்துக் கொண்ட படக்குழுவினர் இப்போது படத்தின் எடிட்டிங் வேலைகளில் பிசியாகியுள்ளனர். ரஜினியின் ‘2.0’ ஜனவரி மாதம் வெளியாவதாக இருந்தது. ஆனால் இப்படத்தின் கிராஃபிக்ஸ் போன்ற டெக்னிக்கல் வேலைகள் முடிய இன்னும் சில காலம் தேவைப்படுவதால் ‘2.0’வின் ரிலீஸை ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். ‘2.0’ ஏப்ரலில் வெளியானதும் அதனை தொடர்ந்து ‘காலா’வை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ‘கபாலி’ படத்தை தொடர்ந்து ரஞ்சித்தும், ரஜினியும் இரண்டவது முறையாக இணைந்துள்ள ‘காலா’வில் ரஜினியுடன் ஹுமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பட்டீல், சமுத்திரக்கனி முதலானோரும் நடித்திருக்கிறார்கள். ‘கபாலி’க்கு இசை அமைத்த சந்தோஷ் நாராயணனே ‘காலா’வுக்கும் இசை அமைக்கிறார்.

#Rajinikanth #Kaala #Kabali #PaRanjith #WunderbarFilms #Dhanush #SanthoshNarayanan #Samuthirakani #2pointO

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பேட்ட ட்ரைலர்


;