‘இமைக்கா நொடிகள்’ படப்பிடிப்பில் விஜய்சேதுபதி!

‘இமைக்கா நொடிகள்’ படம் பற்றிய புதிய தகவல்கள்

செய்திகள் 4-Dec-2017 11:30 AM IST Chandru கருத்துக்கள்

கேமியோ ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘டிமான்ட்டி காலனி’ அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் படப்பிடிப்பு பெரும்பான்மையாக முடிவடைந்துவிட்டது. இப்படத்தில் சிறப்புத்தோற்றமொன்றில் விஜய்சேதுபதி நடிக்கிறார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் படப்பிடிப்பில் நேற்றுமுதல் நடித்து வருகிறாராம் விஜய் சேதுபதி.

‘நானும் ரௌடிதான்’ படத்திற்குப் பிறகு விஜய்சேதுபதியும், நயன்தாராவும் இணைந்து நடிக்கும் படம் ‘இமைக்கா நொடிகள்’ என்பது குறிப்பிடத்தக்கது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பில், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில், புவன் ஸ்ரீனிவாசன் படப்பிடிப்பில் உருவாகும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை ஜனவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனராம்.

#ImaikkaNodigal #AtharvaMurali #Nayantara #RashiKhanna #VijaySethupathi #Atharva #AjayGnanamuthu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தில்லுக்கு துட்டு 2 டீஸர் 02


;