கனடாவில் வினய், சுபிக்‌ஷா பட இசை வெளியீட்டு விழா!

ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் வினய், சுபிக்‌ஷா நடிக்கும் ‘நேத்ரா’ படத்தின் இசை வெளியீட்டு விழா கனடாவில் நடைபெறுகிறது!

செய்திகள் 2-Dec-2017 11:14 AM IST VRC கருத்துக்கள்

இருபதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இப்போது இயக்கி வரும் படம் ‘நேத்ரா’. இந்த படத்தில் வினய், தமன் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக ‘கடுகு’ படத்தில் நடித்த சுபிக்‌ஷா நடிக்கிறார். இவர்களுடன் ‘ரோபோ’ சங்கர், இமான் அண்ணாச்சி, வின்சென்ட் அசோகன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜி.கே.ரெட்டி ஆகியோரும் நடிக்கிறார்கள். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்தும் கொடுத்து ஏற்கெனவே பல படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இந்த படத்தையும் அதே பாணியில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இயக்கியுள்ளாராம்.

இந்த படத்தின் ஒளிப்பதிவை ஜெயப்பிரகாஷ் கவனிக்க, ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். படத்தொகுப்பை என்.கணேஷ்குமார் கவனிக்கிறார். வசனங்களை அஜயன் பாலா எழுதியுள்ளார். இந்த படத்தை தயாரிக்கும் பரா. ராஜசிங்கம் கனடா நாட்டில் வாழ்ந்து வரும் தமிழர். இதனால் இந்த படத்தின். இசை வெளியீட்டு விழாவை கனடா நாட்டில் வைத்துள்ளார். ‘நேத்ரா’ இசை வெளியீட்டு விழா இன்று (2-12-17) கனடாவில் நடைபெறுகிறது.

#Nethra #Vinay #Subhiksha #SrikanthDeva #Jayaprakash #AVenkatesh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பறிவாளன் - மேக்கிங் வீடியோ


;