‘TSK’ பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிவடைந்தது!

செய்திகள் 2-Dec-2017 10:43 AM IST VRC கருத்துக்கள்

விக்‌னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன்,. ஆர்.ஜே.பாலாஜி, செந்தில், சுரேஷ் மேனன் முதலானோர் நடிக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ ஞானவேல் ராஜா தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நேற்றுடன் முடிவடைந்து விட்டது என்ற தகவலை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சூர்யாவும், விக்னேஷ் சிவனும் முதன் முதலாக இணைந்துள்ள இப்படத்தின் டீஸர் மற்றும் ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடலுக்கும் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்று முன் தினம் வெளியான இப்படத்தின் டீஸருக்கு 5 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களின் பார்வையிடல்கள் கிடைத்துள்ளது. ‘தானா சேர்ந்த கூட்டம்’ பொங்கலுக்கு வெளியாகவிருப்பதால் இப்படத்தின் இறுதிகட்ட வேலைகளில் படு பிசியாகியுள்ளனர் படக்குழுவினர்.

#ThaanaSerndhaKoottam #Suriya #KeerthySuresh #VigneshShivn #StudioGreen #Anirudh #Senthil #RamyaKrishnan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;