விவேக், தேவயானி இணையும் ‘எழுமின்’

‘உரு’ படத்தை இயக்கிய வி.பி.விஜி எழுதி இயக்கும் எழுமின் படத்தில்  இணையும் விவேக், தேவயானி!

செய்திகள் 1-Dec-2017 11:47 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் வெளியான ‘உரு’ படத்தை தயாரித்தவர் வி.பி.விஜி. இவர் அடுத்து தனது ‘மையம் மீடியாஸ்’ நிறுவனம் சார்பாக ஒரு படத்தை எழுதி இயக்கி தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ‘எழுமின்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விவேக் கதையின் நாயகனாக நடிக்கிறார். கதையின் நாயகியாக தேவயானி நடிக்கிறார். விவேக், தேவயானி இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கு வினோத் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கணேஷ் சந்திரசேகரன் இசை அமைக்கிறார். படத்தொகுப்பை கார்த்திக் ராம் கவனிக்க, கலை இயக்கத்தை எஸ்.ராம் கவனிக்கிறார். விவேக், தேவயானியுடன் சில குழந்தைகளும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.

#Ehumin #Vivek #Devayani #VPViji #MaiyamMedias

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குலேபகாவலி - சேராமல் போனால் பாடல் வீடியோ


;