‘மெர்சல்’ நஷ்டமா? - தயாரிப்பாளர் தனஞ்செயன் அதிர்ச்சி

‘மெர்சல்’ நஷ்டமா? - தயாரிப்பாளர் தனஞ்செயன் அதிர்ச்சி

செய்திகள் 30-Nov-2017 11:12 AM IST Chandru கருத்துக்கள்

‘தெறி’ படத்துக்குப் பிறகு விஜய் & அட்லி இணைந்து உருவாக்கிய படம் மெர்சல். தீபாவளிக்கு ரிலீஸான இந்தப்படம் இன்னும்கூட திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் உலகளவில் மிகப்பெரிய வசூல் செய்திருப்பதாக சினிமா டிரேட் வட்டாரங்கள் கூறிவந்த நிலையில், சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘‘மெர்சல் படம் 40 கோடிக்கும் மேல் நஷ்டம்’’ எனக் கூறி சர்ச்சையைக் கிளப்பினார். இதுகுறித்து இதுவரை தயாரிப்புத்தரப்பில் எந்தவித விளக்கமும் கூறாத நிலையில், இந்த செய்தியைக் கேள்விப்பட்டு தயாரிப்பாளர் தனஞ்செயன் ‘மெர்சல்’ நஷ்ட சர்ச்சை குறித்து தன் கருத்துக்களை ட்விட்டரில் பதிந்துள்ளார்.

‘‘மெர்சல் படம் நஷ்டம் என சிலர் கூறியதைக் கேட்டு நான் மிகப்பெரிய அதிர்ச்சியடைந்தேன். இது ஏதோ தனிநபர் வெறுப்பால் கூறப்பட்டதாகத்தான் நான் நினைக்கிறேன். மெர்சல் பட கலெக்ஷன் பற்றி இதுவரை தயாரிப்பாளர்களே வாய் திறக்காத நிலையில், படத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள் எதற்காக இப்படி நஷ்டக் கணக்கு காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. அதுவும் எந்த அடிப்படையில் மெர்சல் படம் நஷ்டம் எனக் கூறுகிறார்கள் என்றே புரியவில்லை. என்னைப் பொறுத்தவரை மெர்சல் படத்தால் அனைவருக்கும் லாபமே. வெளியிட்ட தியேட்டர்கள், வாங்கிய விநியோகஸ்தர்கள் என அனைவருக்கும் நல்ல ஷேர் கிடைத்திருக்கும்போது, தயாரிப்பாளர்களுக்கு மட்டும் நஷ்டமா ஏற்படும். விரைவில் தயாரிப்பு நிறுவனமே மெர்சல் படத்தின் சரியான வசூல் நிலவரங்களை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கிறேன். அதுவரை மற்றவர்கள் வாய் திறக்காமல் இருப்பதே நலம்’’ என்று ட்வீட் செய்துள்ளார்.

#Mersal #Vijay #UTVDhanajeyan #Samantha #Atlee #Svesekar #KajalAgarwal #SriThenandalFilms #ARRahman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;