ஒரு டஜன் படங்களில் நாயகியாக நடித்துக் கிடைத்த புகழைவிட ஓவர் நைட்டில் ‘பிக் பாஸ்’ மூலம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புகுந்ததன் மூலம் பெற்றுவிட்டார் நடிகை பிந்து மாதவி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அவரைத் தேடி பல பட வாய்ப்புகள் வந்தாலும், நல்ல கதைக்காகக் காத்திருந்தார். இந்த நேரத்தில்தான் கரு.பழயனிப்பனின் ‘புகழேந்தி எனும் நான்’ படத்தின் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு பிந்து மாதவியைத் தேடி வந்துள்ளது. கதையும், கேரக்டரும் பிடித்துப்போகவே உடனே ஓகே சொல்லிவிட்டாராம் பிந்து.
முழுக்க முழுக்க அரசியல் களத்தை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்கிறார் பிந்து. டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. அக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் தி ஃபோர்த் வால் நிறுவனங்கள் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன.
#Arulnidhi #KaruPazhaniyappan #BindhuMadhavi #AxessFilmFactory #PugazhendhiEnumNaan #DImman #Yugabharathi
அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம்...
அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடித்து வரும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை...
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன்,...