‘ஷார்ப் டைம்’மிங்கில் ‘அண்ணாதுரை’யை ‘கட்’ செய்திருக்கும் விஜய் ஆண்டனி!

‘அண்ணாதுரை’ சாட்டிலைட் ரைட்ஸ், ரன்னிங் டைம் பற்றிய தகவல்

செய்திகள் 24-Nov-2017 12:49 PM IST Chandru கருத்துக்கள்

இரண்டரை மணி நேரம், மூணு மணி நேரம் படம் பார்த்த காலமெல்லாம் மலையேறி விட்டது. இப்போதெல்லாம் ரசிகர்களே இரண்டு மணி நேரத்திற்கு மேல் தியேட்டரில் அமர்ந்து படம் பார்ப்பதற்கு நிறைய யோசிக்கிறார்கள். அதனைக் கருத்தில் கொண்டுதான் இப்போது வெளிவரும் பெரும்பாலான த்ரில்லர் படங்கள் 2 மணி நேர படமாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அந்தவகையில், சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வாங்கி வரும் 30ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் விஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’ படத்தை ஷார்ப்பாக 2 மணி நேரம் 8 நிமிடங்கள் ஓடுவதுபோல் எடிட் செய்திருக்கிறார்களாம். படத்தின் இசைப்பாளர் மட்டுமல்ல, எடிட்டரும் விஜய்ஆண்டனி என்பதுதான் ‘அண்ணாதுரை’யின் சிறப்பே. இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது லேட்டஸ்ட் தகவல்.

#Annadurai #VijayAntony #SunTV #RadhikaSarathkumar #RStudios #Srinivasan #VijayAntonyFilmCorporation

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் -டீஸர்


;