தொடரும் ‘VM’ சென்டிமென்ட்... 4வது முறையாக அஜித், சிவா கூட்டணி!

அஜித்தை 4வது முறையாக இயக்கும் சிவா படத்திற்கு ‘விசுவாசம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது

செய்திகள் 23-Nov-2017 3:10 PM IST Chandru கருத்துக்கள்

வீரம், வேதாளம், விவேகம் படத்தைத் தொடர்ந்து அஜித்துடன் 4வது முறையாக சிவா இணையவிருக்கிறார் என்ற தகவல் சில நாட்களாகவே பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த செய்தி தற்போது அதிகாரபூர்வ உண்மையாகியிருக்கிறது. ‘விவேகம்’ படத்தைத் தொடர்ந்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘விசுவாசம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் துவங்கி, படத்தை தீபாவளியன்று ரிலீஸ் செய்யவிருப்பதாக தயாரிப்பாளர் டி.தியாகராஜன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். வீரம், வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து தற்போது ‘விசுவாசம்’ என டைட்டில் வைத்திருப்பதன் மூலம் ஆங்கில எழுத்தான ‘V’யில் துவங்கி ‘M’ல் முடியும் சென்டிமென்ட்டை இப்படத்திலும் தொடர்ந்திருக்கிறார்கள்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படமும் 2018 தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கெனவே ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படமும் தீபாவளி ரிலீஸுக்கே திட்டமிடப்படுகிறதாம்.

#Ajith #Viswasam #Thala58 #Siva #Vedalam #Veeram #Vivegam #SathyaJothiFilms #YuvanShankarRaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பராக் பராக் வீடியோ பாடல் - Seemaraja


;