அதர்வாவுக்கு ஜோடியாகும் தனுஷ் ஹீரோயின்!

தனுஷ், காளிதாஸ் ஜெயராம் ஆகியோரை தொடர்ந்து அதர்வாவுக்கு ஜோடியாகும் மேகா ஆகாஷ்!

செய்திகள் 23-Nov-2017 10:43 AM IST VRC கருத்துக்கள்

காளிதாஸ் ஜெயராம் ஜோடியாக ‘ஒரு பக்க கதை’, தனுஷ் ஜோடியாக ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களில் நடித்துள்ள மேகா ஆகாஷ் அடுத்து அதர்வாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார். ‘இவன் தந்திரன்’ படத்தை தொடர்ந்து கண்ணன் அதர்வாவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இந்த பத்திற்கான கதாநாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை மேகா அகாஷ் தரப்பினரே நம்மிடம் தெரிவித்தார். இப்போது ஊட்டியில் ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் மேகா ஆகாஷ் கண்ணன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் ஜனவரி மாதம் முதல் கலந்து கொள்ளவிருக்கிறார். கண்ணன் இயக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் மேகா ஆகாஷ் விஸ்காம் ஸ்டுடண்டாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ரதன் இசை அமைக்கிறார்.

#Atharvaa #MeghaAkash #OruPakkaKathai #Dhanush #ENPT #IvanThanthiran #Kannan #Rathan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;