கந்துவட்டிக்கு எதிராக விஷால் பரபரப்பு அறிக்கை!

திரைப்பட தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை – தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பரபரப்பு அறிக்கை!

செய்திகள் 22-Nov-2017 10:50 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் சசிகுமாரின் ‘கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனத்தை நிர்வகித்து வந்தவரும், சசிகுமார் தயாரிக்கும் படங்களில் இணைத் தயாரிப்பாளராகவும் இருந்து வந்த அசோக் குமார் நேற்று சென்னையில் தற்கொலை செய்துகொண்டார். தமிழ் திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:

‘‘கந்துவட்டி அடாவடி கும்பலின் அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் தயாரிப்பாளர் அசோக் குமார் பலினானார் என்பதை அறிந்ததும் கடும் வேதனை அடைந்தேன். இதுவரை பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது கந்துவட்டி. இன்று திரைத்துறையிலும் ஒரு உயிரை பலி வாங்கியிருக்கிறது. எந்த ஒரு பிரச்சனைக்குமே தற்கொலை தீர்வாகாது. கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்கள் உடனடியாக சங்கத்தை அணுகினால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி காப்பாற்ற தயாராக இருக்கிறோம்.

விரைவில் இந்த கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம். தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சக தயாரிப்பாளர்கள் பிரச்சனை இல்லாமல் தொழில் புரிய கூடிய சூழ்நிலை உருவாக்கத்தான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். எந்தவித அச்சுறுத்தலோ மிரட்டலோ இருந்தால் உடனடியாக எங்களை அணுகவும். பொறுத்தது போதும். கூட்டமைபு என்ற பெயரில் தயாரிப்பாளர்களை மிரட்டும் கந்துவட்டி கும்பலுக்கும், காட்டப்பஞ்சாயத்து நபர்களுக்கும் நேரடி எச்சரிக்கை விடுகிறேன். இனியாவது திருந்தி தமிழ் சினிமாவில் இருந்து ஓடி விடுங்கள். இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். இது நேர்மையாக தொழில் செய்யும் அனைத்து தயாரிப்பாளர்களின் முடிவு.

காவல்த்துறைக்கு ஒரு வேண்டுகோள்! இது தற்கொலை அல்ல, கொலை! இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவரையும் உடனடியாக காவல்துறை கைது செய்து சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களோ அல்லது தயாரிப்பாளர்களோ நேமையான அசோக் குமார் போல இன்னொரு அப்பாவி பலியாகாத அளவுக்கு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

#Vishal #NadigarSangam #ProducerCouncil #Ashok #CompanyProduction #Sasikumar #KandhuVatti #AshokKumar #KodiVeeran

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - களவாணி பாடல் வீடியோ


;