நிவின் பாலியின் ‘ரிச்சி’ ஆடியோ மற்றும் ரிலீஸ் தகவல்கள்!

நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரிச்சி’யின் பாடல்கள் நாளை வெளியாகிறது!

செய்திகள் 21-Nov-2017 3:53 PM IST VRC கருத்துக்கள்

மலையாள நடிகர்களான நிவின் பாலி, துல்கர் சல்மான் முதலானோருக்கு தமிழ் நாட்டிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ‘நேரம்’ படத்தை தொடர்ந்து நிவின் பாலி நடிப்பில் வெளியாகிய மலையாள படமான ‘பிரேம்’ படத்திற்கு தமிழ் நாட்டிலும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த படம் சென்னையில் 250 நாட்களுக்கும் மேல் ஓடியது. இந்நிலையில் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள நேரடி தமிழ் படம் ‘ரிச்சி’. அறிமுக இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நட்டி நட்ராஜ், ஸ்ரதா ஸ்ரீநாத் ஆகியோரும் நடித்திருக்கிறாகள். இப்படம் கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘உளிடவரு கண்டண்டே’ என்ற படத்தின் ரீ-மேக் என்ற தகவல் பெரும்பாலானோருக்கும் தெரியும். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையீல் அஜனீஷ் லோகநாத் இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் நாளை வெளியாகவிருக்கிறது. அதனை தொடர்ந்து ‘ரிச்சி’ டிசம்பர் 8-ஆம் தேதி வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்கள்.

#Richie #NivinPauly #GuathamRamachandran #Natraj #ShradhaSrinath #Premam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;