ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் பரிசு!

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் வெளியாகிறது!

செய்திகள் 21-Nov-2017 12:23 PM IST VRC கருத்துக்கள்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனும், இயக்குனர் பொன்ராமும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘ரெமோ’, விரைவில் வெளியாகவிருக்கும் ‘வேலைக்காரன்’ ஆகிய படங்களை தயாரித்துள்ள ‘24 AM STUDIOS’ நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகி வரும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சிவகார்த்திகேயன் பிறந்த நாளான ஃபிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சிவகார்த்திகேயனுடன் சமந்தா முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்து வரும் இப்படமும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்களைப் போல கிராமத்துப் பின்னணியில் உருவாகி வருகிறது.இந்த படத்திற்காக சமந்தா சிலம்பாட்ட பயிற்சி எல்லாம் எடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ரஜினி முருகன் படங்களுக்கு இசை அமைத்த டி.இமான் தான் இப்படத்திற்கும் இசை அமைப்பாளர்!

#Ponram #Sivakarthikeyan #VVS #Rajinimurugan #Samantha #24AMStudios #Velaikkaran #Soori #DImman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பராக் பராக் வீடியோ பாடல் - Seemaraja


;