நாளை முதல் அதர்வாவின் ‘செம போத ஆகாத’

நாளை வெளியாகிறது அதர்வாவின் ‘செமபோத ஆகாத’ டிரைலர் மற்றும் பாடல்கள்!

செய்திகள் 21-Nov-2017 11:03 AM IST VRC கருத்துக்கள்

பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்து தயாரிக்கும் படம் ‘செமபோத ஆகாத’. அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வரும் இப்படத்தின் டீஸரை சமீபத்தில் ஏ.ஏர்.முருகதாஸ் வெளியிட, அந்த டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவெற்பும் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலரை நாளை (22-11-17) வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த படத்தில் அதர்வாவுடன் கதாநாயகிகளாக அனைகா மற்றும் மேற்கு வங்க நடிகை மிஷ்டி சக்ரபோதி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மனோபாலா, கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் முதலானோரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ‘கிக்காஸ் என்டர்டெயின்மெண்ட்’ நிறுவன்ம சார்பில் அதர்வா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் தயாரிப்பிலும் வெளியீட்டிலும் ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனனும் கை கோர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#SemmaBothaAagathey #Atharva #YuvanShankarRaja #BadriVenkatesh #ManoBala #Karunakaran #GopiAmarnath

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீ யாழினி வீடியோ பாடல் - ராஜா ரங்குஸ்கி


;