விஜய்யை தொடர்ந்து தனுஷ்!

விஜய்யை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தை தயாரிக்கிறது ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்

செய்திகள் 18-Nov-2017 3:32 PM IST RM கருத்துக்கள்

விஜய் நடிப்பில் ‘மெர்சல்’ படத்தை தயாரித்து வெளியிட்ட ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் அடுத்து தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறது. இந்த தகவலை அந்நிறுவனத்தை சேர்ந்த ஹேமா ருக்மணி உறுதிப்படுத்தியுள்ளார். ‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து சுந்தர்.சி.இயக்கத்தில் ‘சங்கமித்ரா’ என்ற பிரம்மாண்ட படத்தை தயாரித்து வரும் இந்த நிறுவனம் தனுஷ் நடிக்கும் படம் குறித்த மற்ற விவரங்களை மிக விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களில் நடித்து வருவதோடு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த படம் குறித்த எந்த அதிகார்பூர்வ தகவ;லும் இதுவரை வெளியாகவில்லை!

#Dhanush #Vijay #Mersal #SriThenandalFilms #HemaRukmani #Sangamithra #VadaChennai #Maari2

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்டங்கரன் வீடியோ பாடல் - Sarkar


;