‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கும் படத்திற்கு ரஜினி, விமல் பட டைட்டில்!

மறைந்த இயக்குனர் மணிவாசம் மகன் காந்தி மணிவாசகம் இயக்கி, தயாரிக்கும் படம் ‘களவாணி மாப்பிள்ளை’

செய்திகள் 18-Nov-2017 12:56 PM IST VRC கருத்துக்கள்

நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன் உட்பட 16 படங்களை தயாரித்த ‘ராஜபுஷ்பா’ பட நிறுவனம் 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் இறங்குகிறது. இந்த படத்திற்கு ரஜினி மற்றும் விமல் நடித்த படங்களின் டைட்டில்களை இணைந்து ‘களவாணி மாப்பிள்ளை’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான மறைந்த மணிவாசகம் தான் அனைத்து படங்களையும் இயக்கியவர். அந்த காலத்தில் வெற்றிப்பட தயாரிப்பாளராகவும், வெற்றிபட இயக்குனராகவும் விளங்கிய மணிவாசகத்தின் மகனான காந்தி மணிவாசகம் ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தை தயாரித்து இயக்குகிறார். இந்த படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ரகுநந்தன் இசை அமைக்கிறார். கதாநாயகி மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.

#AttakathiDinesh #KalavaniMappillai #Raghunanthan #ManiVasagam #MappillaiGoundar #Rajini #Vemal

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உள்குத்து - டிரைலர்


;