ஜெய், நிதின் சத்யா இணையும் ‘ஜருகண்டி’

நிதின் சத்யா தயாரிப்பில் ஜெய் நடிக்கும் படம் ‘ஜருகண்டி’

செய்திகள் 18-Nov-2017 12:10 PM IST VRC கருத்துக்கள்

ஜெய் நடிப்பில் நடிகர் நிதின் சத்யா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறார் என்றும் இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவியாளர் பிச்சுமணி இயக்கவிருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியிருந்தது. நிதின் சத்யாவின் ‘ஷ்வேத் நிறுவனமு’ம், பத்ரி கஸ்தூரியின் ‘ஷ்ரத்தா என்டர்டெயின்மென்டு’ம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு வித்தியாசமாக ‘ஜருகண்டி’ என்று டைட்டில் வைத்துள்ளார்கள். ‘‘ஜருகண்டி’ தமிழ் வார்த்தை இல்லை என்றாலும் தமிழ் மக்களுக்கு இந்த வார்த்தை பரிச்சயம் என்பதால் வித்தியாசமாக இந்த டைட்டிலை வைத்துள்ளோம்’’ என்கிறார் தயாரிப்பாளர் நிதின் சத்யா!

இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ரேபா ஜான் நடிக்கிறார். இவர்களுடன் ‘ரோபோ’ சங்கர், டேனி, ‘சிறுத்தை’ அமித், இளவரசு, ‘மைம்’ கோபி ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். போபோ சஷி இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு பொறுப்பை அர்வி ஏற்றுள்ளார். படத்தொகுப்பை கே.எல்.பிரவீன் கவனிக்க, கலை இயக்கத்தை ரெமியன் கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.#Jai #NithinSathya #Pichumani #Jarugandi #BadriKasturi #RebaJhon #RoboShankar #MimeGopi #KLPraveen

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புடிச்சிருக்கா இல்ல புடிக்கலயா வீடியோ பாடல் - கலகலப்பு 2


;