விஷாலின் ‘இரும்புத்திரை’ ஃபர்ஸ்ட் லுக், ரிலீஸ் தேதி?

விஷால் நடித்து வரும் ‘இரும்புத்திரை’ பொங்கலுக்கு ரிலீசாகிறது!

செய்திகள் 17-Nov-2017 5:46 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் ‘இரும்புத்திரை’. விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்க, அர்ஜுன் நெகட்டீவ் கேரக்டரில் நடிக்கிறார். இசைக்கு யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவுக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் என்று கூட்டணி அமைத்து உருவாக்கி வரும் ‘இரும்புத்திரை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நாளை (18-11—17) வெளியிடவிருக்கிறார்கள். இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள படக்குழுவினர் இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவிருப்பதையும் அதிகார்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். ஏற்கெனவே பொங்கல் ரேசில் சூர்யாவின் ‘தனா சேர்ந்த கூட்டம்’, ஆர்.கே.சுரேஷின் ‘பில்லா பாண்டி’, விமலின் ‘மன்னர் வகையற’ ஆகிய படங்கள் ரிலீஸ் தேதி குறித்துள்ள நிலையில் இப்போது விஷாலின் ‘இரும்புத்திரை’யும் பொங்கல் ரிலீஸ் களத்தில் குதித்துள்ளது.

#IrumbuThirai #Vishal #Mithran #Arjun #Samantha #VishalFilmFactory #Thupparivalan #Suriya #ThannaSernthaKoottam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பராக் பராக் வீடியோ பாடல் - Seemaraja


;