‘‘எல்லா காவல்துறையினருக்கும் தீரனை பிடிக்கும்!’’ - டி.ஜி.பி.ஜாங்கிட்!

கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திற்கு டிஜிபி ஜாங்கிட் பாராட்டு!

செய்திகள் 17-Nov-2017 4:18 PM IST VRC கருத்துக்கள்

தமிழகத்தில் டி.ஜி.பி.யாக பணியாற்றிய்வர் ஜாங்கிட். கார்த்தி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை பார்த்து நடிகர் கார்த்தி, இயக்குனர் வினோத் மற்றும் படக்குழுவினருக்கு ஜாங்கிட் பாரட்டு தெரிவித்துள்ளார். அவர் பாராட்டின் விவரம் வருமாறு:

‘தீரன் அதிகாரம் ஒன்று படம் மிக அருமையாக வந்துள்ளது.. உண்மையில் அந்த பவ்ரியா குழுவை பிடிக்கும் மிஷனுக்கு நாங்கள்தான் தலைமை வகித்தோம். எப்படி அந்த சம்பவங்கள் போலீஸ் பார்வையில் நடந்ததோ அது அப்படியே படமாக வந்துள்ளது. நடிகர் கார்த்தியையும் இயக்குனர் வினோத்தையும் நான் ரொம்ப பாராட்ட வேண்டும். ஆரம்பம் முதல் எப்படி பவ்ரியா மிஷனை செயல்படுத்தினோம், எப்படி பத்து ஆண்டுகள் தமிழ் நாட்டில் சம்பவங்கள் செய்தார்கள், அவர்களை நாங்கள் எப்படி பிடித்தோம் என்பதை அப்படியே படம் பிடிக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு பேரை நாங்கள் என்கவுண்டர் செய்தோம், பதிமூன்று பேரை உயிரோடு பிடித்தோம். அதே போன்று உயர்நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றை சரியான முறையில் சேர்த்து செய்துள்ளார்கள். இந்த படத்தில் காண்டப்ப்டும் அனைத்தும் உண்மை. ரொம்ப கஷ்டப்பட்டு பவ்ரியாவுக்கு சென்று நடித்துள்ளார்கள். கமாண்டோ பயிற்சி எவ்வளவு அளித்திருப்பார்கள் என்று நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. குதிரை சவாரி, கமாண்டோ காட்சிகளை பார்க்கையில் சமீபத்தில் வந்த ‘சோலோ’ படம் போல் அருமையாக இருந்தது. படக்குழுவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அருமையான தயாரிப்பு. எல்லா காவல் துறையினருக்கும் இப்படம் பிடிக்கும்’’ என்று கூறியுள்ளார்!

#TheeranAdhigaaramOndru #Karthi #RakulPreet #Ghibran #DreamWarriorPictures #Suriya #HVinoth

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - லாலி லாலி பாடல் வீடியோ


;